இலங்கை
Trending

கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் பகுதியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 ற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரம்படியிலுள்ள நினைவுத் தூபியருகில் இன்று (12) இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட 50 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ் மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கொக்குவில் பிரம்படிப் பகுதியில்,
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தால் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
✕ Tamil World Matrimony Register Now