
இலங்கைக்கான கியூபா தூதுவர் பாட்ரிசியா லசாரா பெகோ குவேரா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(14) மாலையில் இடம்பெற்றது.



இந்தச் சந்திப்பில் கியூபா தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், கொழும்பிலிருந்து புகையிரதத்தில் பயணித்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் நேற்று பிற்பகலில் வந்துறங்கிய கியூபா தூதுவருக்கு அங்கு வரவேற்பளிக்கப்பட்டது.



இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு
மூன்று நாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர் பாட்ரிசியா லசாரா பெகோ குவேரா, இன்று மற்றும் நாளை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

Follow Us



