இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் பின்வாங்க மாட்டோம் - ஜனாதிபதி உறுதிபடத் தெரிவிப்பு!

நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று(16) பிற்பகலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர், “சிறப்பான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு சட்டம் சமமாக இருக்க வேண்டும். சக்தி வாய்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதியான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அதில் பல சவால்கள் உள்ளன. நச்சுப் போதைவஸ்து கிராமம், நகரம் என்று எந்த இடமும் விடாமல் பரவி உள்ளது. அதனை தோற்கடிக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை பல எதிர்பார்ப்புக்களுடன் வளர்த்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நச்சுப் போதையால் மங்கிப்போயுள்ளது. நச்சுப் போதைப் பொருள் அச்சுறுத்தலால் பாகுபாடு இன்றி அனைவரும் இரையாகியுள்ளனர். குறிப்பாக சக்தி வாய்ந்த சக்தி இல்லாத நபர்களும் இதற்கு இலக்காகியுள்ளனர்.

ஆகவே இதனோடு தொடர்புடையவர்கள், பாதாளக் குழுவினருக்கு தண்டனை வழங்கப்படும்.
போதைவஸ்து இல்லாத நாட்டை உருவாக்குவோம்.

மேலும், போதைவஸ்திலிருந்து நீங்குவதற்கு இரண்டு பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று தொடர்பை நீக்குதல், மற்றொன்று அத்துறையில் இருந்து நீங்குதல்” – என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button