
அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் சென்னையின் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 21 ஆவது போட்டியில் 93 ஓட்டங்களால் அமெரிக்க அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற அமெரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 15.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.
இதன் பிரகாரம், அமெரிக்க அணி இந்தப் போட்டியில் 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Follow Us



