Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

வடக்கு மாகாணம்
Trending

பருத்தித்துறையிலும் பல்கலையிலும் கையெழுத்துப் போராட்டங்கள்!

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொண்டு வரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கையெழுத்துப்பெறும் போராட்டம் யாழ்.வடமராட்சி பருத்தித்துறை நகரில் இன்று(21) முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு பொது அமைப்புகளால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தமிழர் கலைமன்ற இயக்குநர் கமலகாந்தன் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் முன்னெடுத்துவரும் கையெழுத்து போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இந்த கையெழுத்துப் போராட்டம் நாளை(22) வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன ஈடுபட்டுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video