இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மகாநாடு சாவகச்சேரியில்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பேராளர் மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கோவிந்தன் கருணாகரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான கந்தையா சர்வேஸ்வரன், சிவனேசன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button