இலங்கை

இந்தியாவின் அயோத்தி நகரிலுள்ள சிவாலயத்தின் பிரதமகுரு கைஷானந்த் கிரி மஹராஜ் உள்ளிட்ட விசேட குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் இன்று(23) காலையில், கட்டுநாயக்க விமான நிலைத்தை வந்தடைந்தனர்.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க குழுவினரை வரவேற்றார்.

ஈழத்து வரலாற்றுச் சிறப்புமிக்க, மன்னார் – திருக்கேதீஸ்வர ஆலயம், கீரிமலை – நகுலேஸ்வர ஆலயம், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், நுவரெலியா – சீதை அம்மன் ஆலயம், பொலன்னறுவை – பண்டைய சிவன் ஆலயங்கள் ஆகியவற்றுக்கு சென்று குழுவினர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button