இலங்கை
Trending

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாதெனவும், தற்போதைக்கு மின்தடை இடம்பெறாதெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம்(17) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

33 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு இன்று அல்லது நாளை நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும், மற்றுமொரு பகுதி எரிவாயு மாலைதீவில் மிதக்கும் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 23 நிலக்கரி கப்பலுக்கான டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 13 கப்பல்கள் வந்துள்ளன. ஏனைய கப்பல்களின் வருகை தாமதமடைகிறதெனவும் ஜனாதிபதி கூறினார்.

கையிருப்பு எரிபொருளை பாதுகாக்கவே QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 5 மில்லியனுக்கு அதிகமானவர்கள் அதற்காக பதிவு செய்துள்ளதாகவும் ஐனாதிபதி குறிப்பிட்டார்.

கைத்தொழில் துறையினருக்கும், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் தேவைக்கேற்ப எரிபொருள் வழங்கப்படும்.

அரசு துறையிலுள்ள ஒவ்வொரு அமைச்சுக்கும் இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவை தமது எரிபொருள் தேவையை 25 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button