இலங்கைஉலகம்
Trending

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான நிதி 480 மில்லியனாக அதிகரிப்பு!

இலங்கைக்கு இந்த ஆண்டில் வழங்கப்படவிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று(24) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்றது. இதன்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை, எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா உறுதியளித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button