
இத்தாலி நாட்டுப் பொலிஸில் பணியாற்றிவரும் இலங்கையரான பொலிஸ் அதிகாரி ஒருவர் சூட்டுக்காயங்களோடு மிலானிலுள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்க்கப்படுள்ளார்.
27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்ற இலங்கை வம்சாவளி இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

அவரது சடலத்துக்கு அருகில் அவர் பயன்படுத்தும் துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ, தல்டேனாவை பூர்வீகமாகக் கொண்ட ஷெஹான், இத்தாலிய பொலிஸில் கடமையாற்றும் ஒரே இலங்கையர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்,அவரது மரணம் தற்கொலையா, கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Follow Us



