உலகம்
Trending

சீனாவில் நிலநடுக்கம்:7 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு!

சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சியில் நேற்று(18) ஏற்பட்ட நில அதிர்வில் இருவர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

5.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நில அதிர்வையடுத்து 7,000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர்.

மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 கட்டடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளதாக தேசிய தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தொடருந்து பாதை உள்கட்டமைப்பின் உறுதித்தன்மையை ஆய்வுசெய்த அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளனர்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button