இலங்கைஉலகம்குற்றவியல்
Trending

வெளிநாடுகளிலுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளோடு தொடர்புடைய 226 பேரை, கைது செய்வதற்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சிவப்பு அறிவித்தல் மூலம், 35 சந்தேகநபர்கள் உட்பட பல்வேறு குற்றங்களோடு தொடர்புடைய சுமார் 130க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்துடன் தற்போது சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 226 சிவப்பு அறிவித்தல்களில், சுமார் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றுஓம் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பதுங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா குறிப்பிட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button