இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

ஐந்தே வயதில் உலக சாதனை நிகழ்த்தவிருக்கும் சிறுமி!

கலைத்துறையில் சிறுவயதிலேயே அபார திறமையை வெளிப்படுத்தி வரும் ஐந்தே வயதான நடன தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, பரதநாட்டியத் துறையில் புதிய உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது ஐந்து வயதில் 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில், தொடர்ச்சியாக 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தனிநபராக பரதநாட்டியமாடி “RAABA BOOK OF WORLD RECORD”ல் உலக சாதனை படைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு நாளை (28) கிளிநொச்சியில் அமைந்துள்ள சோலைவனம் விருந்தினர் விடுதியில் காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பரதநாட்டியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்ட ரஜீவன், அஜந்தினி தம்பதிகளின் செல்வ புதல்வி ஹம்சத்வனி, பல்வேறு மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுவருபவர்.

தற்போது மேற்கொள்ளவுள்ள இந்த நீண்ட நேர தனிநபர் பரதநாட்டிய நிகழ்ச்சி, அவரது திறமை, விடாமுயற்சி மற்றும் கலைப்பற்று ஆகியவற்றை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் அமையவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button