இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!

யாழ்.காரைநகரில், வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும்,

மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டிருந்தன.

திருட்டுத் தொடர்பாக வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர்.

அதன் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 20 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button