Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

வடக்கு மாகாணம்

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்
தென்மராட்சி கெற்பேலி, வீரபத்திரர் கோவிலடியில் இன்று(28) காலை 8:25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் போலீசார் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இதன் போது மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழி மறித்துள்ளனர்.

உழவு இயந்திரம் நிறுத்தாது பொலிஸ் உத்தியோகத்தர்களை மோதி தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து கிளாலியில் வைத்து உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய ஹெட்டியாராட்சிக்கே அல்பேட் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button