இந்தியாஇலங்கைஉலகம்விளையாட்டு
Trending

T20 சுப்பர் 8 போட்டியில் இந்தியாவை தேற்கடித்து தனது வலுமையை வெளிப்படுத்திய தென்னாபிரிக்கா!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற T20 உலகக் கிண்ண 43 ஆவது போட்டியின், சூப்பர் 8 சுற்றின் 3ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி 76 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக, David Miller 35 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். மேலும் டெவால்ட் பிரெவிஸ்(Dewald Brevis) 45 ஓட்டங்களைப் பெற்றார்.

188 என்ற சவாலான வெற்றுயிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணி சார்பாக, Shivam Dube 42 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக, மார்க்கோ ஜான்ஜின்(Marco Jansen) 22 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதிரடியாக விளையாடிய David Miller ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியால் தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் தனது நிலையை மேலும் பலப்படுத்திக் கொண்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button