
ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையில் இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று(09) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரின் 7ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்படுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கட்களை இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது.
இதன்போது முன்ஸி அதிக ஓட்டங்களாக 84 ஓட்டங்களை எடுத்தார். Mc முல்லின் 41 ஓட்டங்களுடனும், லீக்ஸ் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
Follow Us



