Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்குற்றவியல்வடக்கு மாகாணம்
Trending

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்களும் மீட்பு!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும்,கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக்குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை தட்டான்குளம்
வீதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இதன்போது வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு,மினிபஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை வடக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதேடு
இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார்.

அதனையடுத்து கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை, வடக்குக் கிழக்கு ஊரொல்லையிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த இரண்டு கார்கள், பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நெருக்கியுள்ளனர்.

இதன்போது கிராமத்து இளைஞர்களால் தாக்குதல் மேற்கொண்டவர்களில் 4 பேர் பிடிக்கப்பட்டனர்.

ஏனையவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் கொட்டன்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன.

சம்பவ இடங்களுக்கு வருகை தந்த தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு குழுவினருக்கிடை இடையிலான முரண்பாடே தாக்குதல் சம்பவங்களுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video