Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைவடக்கு மாகாணம்
Trending

20 இலட்சம் ரூபா பெறுமதியான 52 தேக்கு மரக் குற்றிகளைக் கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸ்!

சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட தேக்கு மரக் குற்றிகளே இவ்வாறு கைப்பற்ற பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து இன்று (08) அதிகாலை பார ஊர்தி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 52 தேக்கு மரக் குற்றிகளை கைப்பற்றியதாக சாவகச்சேரி தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோகரன் கோணேஸ்வரன் தெரிவித்தார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இதன் போது சாரதியைக் கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபரை சாவ கச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்தள்ளதாகவும் சாவகச்சேரி தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோகரன் கோணேஸ்வரன் குறிப்பிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button