இலங்கைவடக்கு மாகாணம்

விண்ணில் சாகசம் காட்டிய பட்டங்கள்!

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்று(15) சிறப்பாக இடம்பெற்றது.

இதில் 42 பட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன.

முதலாம் இடத்தை யோ. பிரகாஷின் அச்சுலேட்டர் பட்டம் பெற்றது.இரண்டாம் இடத்தை லோ.கோபிசாந்தின் விண்ணில் சிதறிய ரத்தினங்கள் பட்டம் பெற்றது.மூன்றாம் இடத்தை யோ.பிரகாஷின் சாகசம் காட்டும் விமானம் பட்டம் பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருமான எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button