
ஆசிய ஒலிம்பிக் பேரவை ஏற்பாட்டில், ஆறாவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் இம்முறை சீனாவின் சான்யா நகரில் ஏப்ரல் 22 திகதி முதல் 30 திகதி வரை நடைபெற உள்ளன.
அதில் கடற்கரை கபடி போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி சீனா செல்லவுள்ளது.
அந்த அணியில், யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த பிரியவர்ணா மற்றும் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த டிலக்சனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை அணி வீர்ர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நாளை மறுதினம்(19) சீனாவின் சான்யா நகருக்கு பயணமாகின்றனர்.

Follow Us



