Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதிப் புனரமைப்பை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

யாழ்ப்பாணம் ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (11) நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

680 மில்லியன் ரூபா நிதியில் 6.03 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.

துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஷ், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் குரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button