Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

விளையாட்டு
Trending

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டியில் பெங்களூர்ரோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி!

லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிக்கும், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற, இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூர் சின்னசாமி விளையாட்டு அரங்கில் நேற்று இரவு (15) நடைபெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்படுத்தாடிய லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை பெற்றது.

லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணி சார்பாக, Mitchell Marsh 40 பந்துகளுக்கு முகங்கொடுத்து 32 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய, பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி, 15.1 ஓவர்களில் ஐந்து விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பாக, virath kohli 34 பந்துகளுக்கு முகங்கெடுத்து 49 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகராக Josh hazlewood தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கமைய, பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் தொடரின் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றபெற்று 8 புள்ளிகளொடு தற்போது முன்னிலையிலுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video