இலங்கைஉலகம்விளையாட்டு
Trending

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் சேர்ப்பு!

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இந்திய வீரர் சாய் சுதர்சனுக்குப் பதிலாக சர்பராஸ் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை – இந்திய அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கையில் விளையாடுகிறன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் விலகியதை தொடர்ந்து சாய் சுதர்சனும் விலகினார்.

இந்த நிலையில், காயம் காரணமாக, இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button