இந்தியாஇலங்கைஉலகம்
Trending

இந்தியப் பிரதமரோடு தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாக
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் நேற்று(24) மாலையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான நிலைவரங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் குறித்தும் இதன்போது உரையாடப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button