
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.
மனு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் தனது முடிவை அறிவித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் தடவையாக 2026 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



