Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்
Trending

மின் கட்டணம் இன்று முதல் உயர்வு!

மின்சாரக் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான கட்டணங்களும் வெவ்வேறு விகிதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் முதல் அதிகப்படியான பாவனையாளர்கள் வரை அனைவருக்குமே இந்தக் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது.

30 அலகுகளுக்கு கீழ், 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

30 – 60 அலகுகளுக்கு 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

61 – 90 அலகுகளுக்கு 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

91 – 180 அலகுகளுக்கு 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, இதற்கான கட்டணம் 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல், ஆகக்கூடிய அளவாக 25% கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் ஏனைய துறைகளுக்கும் கட்டணங்கள் பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளன.

கைத்தொழில் துறை 8.7% உயர்வும், விருந்தகங்களுக்கு 9.9% உயர்வும்,அரச நிறுவனங்களுக்கு 14.4% உயர்வும் நுர்ணயிக்கப்பட்டுள்ளன.

மதஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகளுக்குக் குறைவான மின்சாரப் பாவனைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

எனினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு 9.6% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய மின்னுற்பத்தி செலவுகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button