இலங்கைஉலகம்கிழக்கு மாகாணம்தென் மாகணம்மலையகம்மேல்மாகாணம்வடக்கு மாகாணம்
Trending

ஓகஸ்ட் முதல் வாரத்தில் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 7,827 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை, இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்து 86 ஆயிரத்து 228 ஆக பதிவாகியுள்ளது.

ஜனவரி முதல் ஓகஸ்ட் 6 வரை இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 46 ஆயிரத்து 57 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதேகாலப் பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1 இலட்சத்து 35 ஆயிரத்து 323 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button