
கிளிநொச்சி மாவட்ட மூன்றாம் காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
பூநகரி கௌதாரிமுனையில் உள்ள சுற்றுலா அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 300 ஏக்கர் காணியில், முதல் கட்டமாக 113 ஏக்கர் காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது.
மேலும், எல்லை நிர்ணயம் தொடர்பாக, சில கிராம அலுவலர் பிரிவுகளை இணைப்பதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாவும் கவனம் செலுத்தப்பட்டது.

பளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண மக்களின் கட்டுமானத் தேவைகளுக்கான மணல் விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.




