இலங்கைஉலகம்

கோட்டை புகையிரத நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல் திட்டம்: பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திற்கு நவீன மயப்படுத்தும் பணிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த “புகையிரத வினைத் திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக”, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாயிரத்து 162 மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்படவுள்ளது.

அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யப்படவுள்ளதோடு இத்திட்டத்தின் ஊடாக தினசரி புகையிரதச் சேவையைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக நவீன தானியக்க பயணச்சீட்டு வழங்கல் முறைமைகளை அறிமுகப்படுத்துதல்,

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

விசேட தேவையுடையோர் மற்றும் முதியோர் தடையின்றிப் பயணிக்கும் வகையில் நவீன மின்தூக்கிகள் மற்றும் மேம்பாலக் கட்டமைப்புகளை நிர்மாணித்தல்,

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கட்டடத் தொகுதிகள் மற்றும் உயர்தரத்திலான சுகாதார வசதிகளை நிறுவுதல் ஆகிய திட்டங்களுள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி,

பிரதி அமைச்சர்களான பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர, கொழும்பு பிரதி முதல்வர் ஹேமந்த வீரசிங்க ஆகியோரும்,

புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட அமைச்சு மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button