இலங்கைஉலகம்விளையாட்டு

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காட்டிய ஸிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் ஸிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய ஸிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.

ஸிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களும் அடங்கும்.

இதனையடுத்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவஸ்திரேலிய அணி, 19.3 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஸிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button