இலங்கைஉலகம்குற்றவியல்
Trending

சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் வழக்கு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்று(24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்கு வழங்கப்பட்ட காசோலை ஒன்றை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தாரென சாமர சம்பத் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button