இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்விளையாட்டு
Trending

யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (09) இடம்பெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாவது இடத்தையும், நல்லூர் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தையும், சங்கானை பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

மேலும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,

மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button