இலங்கை
Trending

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!

யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
எரங்க குணசேகர யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பாக இன்று (17) நேரில் சென்று ஆராய்ந்தார்.

முதலில் யாழ்.மாநகர சபைக்கென புதிதாக அமையப்பெற்றுள்ள கட்டடத் தொகுதியை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வண்ணாங்குளத்தை பார்வையிட்டதோடு அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், யாழ் . பண்ணைப் பகுதி, பேருந்து தரிப்பிடங்கள் ஆகியவற்றையும் பிரதியமைச்சர் பார்வையிட்டார்.

இதன்போது பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவுடன் யாழ்.மாநகரசபை ஆணையாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தறாஜ்,
யாழ்.மாநகரசபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் உடன் சென்றிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button