Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" - மனைவியை தீக்குளிக்க செய்த கணவன்!

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – முனைக்காடு பகுதியில் நேற்று (17) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி.அனுஷ்வரன் என்பவரே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், 31 வயதான பிரகலாதேவி என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, “நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு” என வற்புறுத்தியுள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரே தீ வைக்கத் தூண்டியுள்ளார்.

இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சந்தேக நபரான கணவன் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video