Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!
இந்தியாஉலகம்விளையாட்டு
Trending

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!

பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிகளுக்கும் இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் 23 ஆவது இன்றிரவு (15) இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 22 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்றிரவு (14) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக sanju samson 32 பந்துகளில் 48 ஓட்டங்களை அதி கூடிய ஓட்டங்களாக பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக Ramandeep Singh 23 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார்.

அதற்கமைய இந்தியன் பிரீமியர் லீக்கின் 22 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button