
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் தலைமறைவாக இருந்த வெல்லே சாரங்க, சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) அடிப்படையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் கொலைச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடைய வெல்லே சாரங்க, இலங்கைக்கு விரைவில் கொண்டுவரப்படவுள்ளார்.

Follow Us



