வடக்கு மாகாணம்
Trending

தீவகப் பகுதி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட பின்தங்கிய பிரதேச கொடுப்பனவை ஆராய குழு நியமனம்!

யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து நீக்கி கொடுப்பனவுகளை நிறுத்தியுள்ளதை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த தீவுப் பகுதிகளுக்கான பின்தங்கிய பிரதேச சேவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவந்தன.

இதன்காரணமாக நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் பணியாற்றும் 92 ஆசிரியர்களும், நயினா தீவில் 3 பாடசாலைகளிலுள்ள 46 ஆசிரியர்களும்,

அனலைதீவில் 3 பாடசாலைகளிலுள்ள 23 ஆசிரியர்களும், எழுவைதீவில் 2 பாடசாலைகளிலுள்ள 13 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மாகாண சபைகளால் முன்வைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், அந்த வகைப்படுத்தலில் சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இடம்பெற்ற தவறைக் கண்டறிந்து சரிசெய்ய, விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உறுதியளித்துள்ளா

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button