
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் 20 ஆவது வாரமாகவும் இன்றும் (04) போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டம் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இடம்பெற்றது.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலத்தில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத்தால் தொடர்ந்தும் அவ்விடங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

அதன்காரணமாக பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்து போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கமைய இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 20 ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னடுத்தனர்.




