
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்திப் பகுதியில் வசித்துவந்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுண் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று(08) காலையில் இடம்பெற்றுள்ளது.
மணல்காடு சந்துப் பகுதியிலுள்ள வீட்டில் கணவன் மனைவி இருவர் மட்டும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில்,நேற்று அதிகாலை மதிலால் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் மூவர், கணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன்பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் தங்க நகையை கழுத்திலிருந்து அறுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த கணவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow Us



