இலங்கைஉலகம்
Trending

மகளிர் தின நிகழ்வில் பங்கேற்க பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர்!

பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மணிலாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் நேற்றிரவு(08) பிலிபைன்ஸுக்கு விஜயம் செய்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

​மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

​இந்த விஜயத்தின்போது மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்.

​மேலும் , பிலிப்பைன்ஸ் அமைச்சர்களோடும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button