இலங்கை
Trending

கொழும்பு வத்தளையிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!

கொழும்பு வத்தளை – துவவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வத்தளை – துவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சேத விபரங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button