
இடி மின்னல் தாக்கி நுவரெலியா – நோர்வூட் – ரொக்வூட் தோட்டத்தில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 86 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



