இலங்கை
Trending

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவருகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த சில மணித்தியாலங்களிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை 08.30 முதல் இன்று அதிகாலை 04 மணி வரையான காலப்பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அவிசாவளையில் 230 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனிடையே மழையுடனான வானிலைக் காரணமாக 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் .ரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செலயக பிரிவுகளுக்கும் 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்திள் புலத்சிங்கள் பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலக பிரிவுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாஐக அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button