
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (19) 37ஆம் நாள் அகழ்வுப் பணியின்போது 9 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம்
காணப்பட்டுள்ளன.
இதன்மூலம், மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை மொத்தம் 446 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 434 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 429ஆம் இலக்க மனித என்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்ட மனித என்புக்கூடு கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

Follow Us



