
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சையானது நாடு முழுவதிலுமுள்ள 2,723 மையங்களில் இடம்பெறவுள்ளது.
அதன்படி, இரண்டாம் பகுதிப் பரீட்சை முற்பகல் 9.30 முதல் 10.45 மணி வரையிலும், முதலாம் பகுதிப் பரீட்சை முற்பகல் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையிலும் இடம்பெறும்.
இந்தநிலையில் விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்கள் தகவல்களைத் திருத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள், www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலுள்ள பரீட்சைகள் தகவல் மையத்தை அணுகுவதன் மூலமாகவோ அல்லது http://onlineexams.gov.lk மூலமாகவோ,
ஜூலை 23 முதல் ஓகஸ்ட் 3 ஆம் திகதி வரை இணையவழியில் அவற்றை மேற்கொள்ளமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.




