இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்!

காட்டுத்தீயால், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளிலிருந்தும் இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பியக் கண்டத்தில் பலத்த காட்டுத்தீ தொடர்ந்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் சுமார் 25 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கு போன்று வீடுகளுக்குள்ளேயே இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, தென்மேற்கு பிரான்ஸின் ஜிரோண்ட் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்டுத்தீயால் இதுவரை 12 ஆயிரத்து 500 ஹெக்டேயர் காடுகள், 53 வீடுகள் மற்றும் ஒரு சுற்றுலா முகாம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button