இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்த முடிவு!

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில்நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் இதனை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து நடாத்திய தனிநாயகம் நினைவரங்கம்யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.

அதேவேளை, நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தநிலையில், 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகளுக்கான முக்கிய மாநாடாக இது அமையவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button