செம்மணியில் நேற்றும்10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் நேற்று (18) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்டத்தின் 55 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன.
இதன்போதே குறித்த என்புக் கூடுகள் இனங்காணப்பட்டதோடு அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் 56 நாட்கள் வழங்கியிருந்த நிலையில் இன்றைய (19) தினத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவடையவுள்ளன.
மேலும், இதுவரை செம்மணி மனித புதைகுழியில் 3 கட்டங்களிலும் மொத்தமாக 109 நாட்கள் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய 582 என்பு கூடுகள் மொத்தமாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




