இலங்கைஉலகம்விளையாட்டு
Trending

FIFA சர்வதேச அரங்கில் நடுவராக அனோஜன் கனகசிங்கம்!

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில், ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தை 2026ஆம் ஆண்டு பெற்றுள்ள அனோஜன், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான லமீன் யமால் பங்கேற்ற இந்தப் போட்டியையும் நிர்வகித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் Super League தொடரில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வரும் அவர், இதுவரை 34 போட்டிகளை நிர்வகித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 16ஆம் திகதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியிலும் பிரதான நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்தில் இருந்து ஐரோப்பிய மற்றும் FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியுள்ள அனோஜன் கனகசிங்கத்தின் சாதனை, ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button